ராமேஸ்வரத்தில் 10 மாதத்திற்கு பின் சுவாமி அம்மன் உலா
ராமேஸ்வரம் - ராமேஸ்வரத்தில் கோயிலில் 10 மாதத்திற்கு பின் தைப்பூச விழாவுக்கு ராமநாதசுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் வீதி உலா வந்ததால், பக்தர்கள் பரவசமாகினர்.ஊரடங்கினால் கடந்த 10 மாதமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் வீதி உலா ரத்து செய்தும், கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்கள் மூடிய நிலையில் உள்ளது. இதனால் ரதவீதியில் சுவாமி, அம்மனை தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இந்நிலையில் 10 மாதத்திற்கு பின் நேற்று தைப்பூச விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் காலை 10:30 மணிக்கு சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி ரதவீதி, நடுத்தெரு, திட்டகுடி, மேலத்தெரு வழியாக வீதி உலா வந்து லெட்சுமணேஸ்வரர் கோயிலில் எழுந்தருளினர்.பரவசம் 10 மாதம் பின் சுவாமி, அம்மன் வீதி உலா வருவதை கண்ட ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். ------