ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED :1751 days ago
திருப்பூர் : திருப்பூர், லட்சுமி நகர் ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, கோலாகலமாக நேற்று நடந்தது. திருப்பூர், லட்சுமி நகர் ஸ்ரீஉண்ணாமுலை நாயகி உடனமர் அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது. புனித தீர்த்த குட ஊர்வலம், கணபதி ேஹாம பூஜைகளுடன், கும்பாபிேஷக விழா துவங்கியது.யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கி, முதல்காலம் மற்றும் இரண்டாம்கால வேள்வி பூஜைகள் நடந்தன. சிவாச்சார் யர்களின், வேத மந்திரங்களுடன், யாகசாலை பூஜைகள் நடந்தன. நிறைவேள்வியை தொடர்ந்து, காலை, 9:00 மணி முதல்,10:30 மணி வரை, கும்பாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து மகா அபிேஷகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.