லட்சுமி நரசிம்மர் கோவிலில் யாகசாலை பூஜை துவங்கியது
கடலுார்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜைகளுடன் துவங்கியது. கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இங்கு, இரணியனை வதம் செய்த கோலத்தில் 16 கைகளுடன் உக்கிர நிலையில் நரசிம்ம பெருமாள் மேற்கு திசை நோக்கி பிரகலாதனுக்கு காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கோடி ரூபாய் மற்றும் தனியார் பங்களிப்புடனும் கோவிலில் திருப்பணிகள் நடந்து முடிந்த நிலையில், வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதனையொட்டி , நேற்று வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பணம், ேஹாமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. இன்று 2ம் தேதி காலை 7:00 மணிக்கு மகா சாந்தி ேஹாமம், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடக்கிறது. நாளை 3ம் தேதி காலை 7:00 மணிக்கு கும்பாராதனம், 9:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. 4ம் தேதி காலை 5:00 மணிக்கு யாத்ரா தானம், பூர்ணாஹூதி, 9:15 மணிக்கு மேல் 10:45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.