சங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜை விழா
ADDED :1749 days ago
புதுக்கோட்டை:புதுக்கோட்டையில் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின், 98ம் ஆண்டு குருபூஜை விழா நடந்தது.
புதுக்கோட்டையில் நாடகத்தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின், 98ம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் புதுக்கோட்டை முத்தமிழ் நாடக நடிகர் சங்கத்தின், 73ம் ஆண்டு விழாவும் நேற்று நடந்தது. இதையொட்டி, சங்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் மேளதாளங்கள் முழங்க, கரகாட்டத்துடன் நுாற்றுக்கும் மேற்பட்ட நாடக நடிகர்கள், புதுக்கோட்டை நகரில் பல்வேறு பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர்.