எமதர்மர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :1989 days ago
மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே எமதர்மர் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன. சிறுமுகையை அடுத்த ஜடையம்பாளையம் அருகே சென்னம்பாளையத்தில் எமதர்மர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு மாதமும், அமாவாசை, பவுர்ணமி நாளில், கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தை அமாவாசையை முன்னிட்டு நேற்று, சிறப்பு பூஜைகள் நடந்தன. எமதர்மருக்கு அலங்காரமும், அபிஷேகமும் நடந்தது. பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.