படிப்பாதையில் செல்ல பழநி பக்தர்கள் ஆர்வம்
ADDED :1792 days ago
பழநி: பழநி முருகன் கோயிலில் தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது.கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் குடமுழுக்கு மண்டபம் வழியே யானைப்பாதை அடைந்து மலைக்கோயிலுக்கு செல்கின்றனர். மேலும் வின்ச், ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது.இந்நிலையில் தங்கத் தொட்டில், தங்கத் தேர், கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள விடுதி அறைகள் முன்பதிவு துவங்கியுள்ளது. பாதவிநாயகர் கோயிலுக்கு பின் செல்லும் படிப்பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுதில்லை.இப்படிப் பாதைகளில் கன்னிமார், 18 ம் படி கருப்பராயன் கோயில்கள் உள்ளன. இப்பாதை தற்போது திறக்கப்படவில்லை. அதனை பயன்பாட்டிற்கு திறந்து பக்தர்களை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.