விஜயேந்திர சரஸ்வதி சுவாமி பிப்., 25ல் மதுரைக்கு விஜயம்
ADDED :1730 days ago
மதுரை : மதுரை சொக்கிகுளம் பெசன்ட் ரோடு ஸ்ரீ மடத்திற்கு காஞ்சி காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிப்., 25 மாலை 6:00 மணிக்கு விஜயம் செய்கிறார்.
மதுரை மடத்தின் கிளை தலைவர் ராமசுப்பிரமணியன் கூறியதாவது: மடத்திற்கு சுவாமி விஜயம் செய்யும் போது மதுரை மக்கள் சார்பில் பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்கிறோம். பிப்., 26, 27ல் சுவாமி ஸ்ரீசந்திர மவுலீஸ்வர பூஜை செய்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார். பிப்., 27 மதியம் 3:00 மணிக்கு திருவானைக்காவல் புறப்படுகிறார். சுவாமிகளுக்கு பாத பூஜை செய்ய விரும்பும் பக்தர்கள் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.மடத்தின் துணைத் தலைவர் சுப்பிரமணியன், செயலாளர் ஸ்ரீசுந்தர், பொருளாளர் ஸ்ரீகுமார், நிர்வாகி வெங்கடேசன், மேலாளர் சீனிவாசன் உடனிருந்தனர்.