தென்பரங்குன்றம் கோயிலில் வருடாபிஷக விழா
ADDED :2076 days ago
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உப கோயிலான தென்பரங்குன்றம் பால்சுனை கண்ட சிவபெருமான் கோயிலில் வருடாபிஷேகம், பிரதோஷ பூஜைள் நடந்தது. 500 லிட்டர் பால் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் முடிந்து வெள்ளி கவசம் சாத்துப்படியாகி தீபாராதனை நடந்தது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை ஏற்பாடுகளை பிரதோஷ கமிட்டியினர் செய்தனர்.*கல்களம் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயிலில் சொக்கநாதர், பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில், திருநகர் சித்தி விநாயகர் கோயில் காசி விஸ்வநாதருக்கு பிரதோஷ பூஜைகள் நடந்தது.