அமரேஸ்வரர் கோவிலில் மாசிமக மண்டகப்படி உற்சவம்
ADDED :1692 days ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், அமரேஸ்வரர் கோவிலில் எழுந்தருளும் மாசிமக மண்டகப்படி உற்சவம் நேற்று விமரிசையாக நடந்தது.
மாசி மகத்தன்று, பல நுாறு ஆண்டுகளாக, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பிகையுடன், வீதியுலாவாக சென்று, அமரேஸ்வரர் கோவிலுக்கு செல்வது வழக்கம். அதன்படி, மாசி மக உற்சவமான நேற்று, காலை, 9:00 மணிக்கு, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர், குழலி அம்பிகையுடன், நான்கு ராஜ வீதிகள் உலா வந்து, அமரேஸ்வரர் கோவிலுக்குச் சென்றார்.கோவிலில், மாலை, 4:00 மணிக்கு, ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்பிகை மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. பக்தர்கள் தரிசனத்திற்கு பின், இரவு, 8:30 மணிக்கு, மஹா தீபாராதனை முடிந்ததும், ஏகாம்பரநாதர், ஏலவார் குழலி அம்பிகையுடன் புறப்பட்டு, ஏகாம்பர நாதர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றார்.