உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

கருமத்தம்பட்டி:கணியூர் ஊராட்சி வேட்டைக்காரன் குட்டை குமார் நகர், முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சி வேட்டைக்காரன்குட்டை, குமார் நகரில் உள்ள காரிய சித்தி விநாயகர், முத்துமாரியம்மன், கருப்பராய சுவாமி கோவில்கள் பழமையானவை. இங்கு, விமானம் அமைத்தல், மகா மண்டபம் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் நடந்தன. கடந்த, 23ம் தேதி காலை, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. ராயர்பாளையத்தில் இருந்து முளைப்பாரியும், சக்தி கவசமும் அழைத்து வரப்பட்டன. நேற்று காலை, இரண்டாம் கால ஹோமமும், மாலை, மூன்றாம் கால ஹோமமும் நடந்தது. இரவு அஷ்டபந்தன மருந்திடப்பட்டது.நான்காம் கால ஹோமம் முடிந்து, 8:30 மணிக்கு, விமானங்கள் மற்றும் காரிய சித்தி விநாயகர், முத்து மாரியம்மன், கருப்பராய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தச தானம், மகா அபிஷேகம் நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !