மேலும் செய்திகள்
அலங்காநல்லுார் வரம் தரும் விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்
1649 days ago
ஓணம் பண்டிகை : போடி ஐயப்பன் கோயிலில் சிறப்பு வழிபாடு
1649 days ago
விலங்கல்பட்டு சிவசுப்பரமணியர் கோவிலில் திருக்கல்யாணம்
1649 days ago
மாண்டியா : மாசி மகம் பவுணர்மியை ஒட்டி, ஸ்ரீரங்கபட்டணா, நிமிஷாம்பா கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கபட்டணாவில், வரலாற்று புகழ் பெற்ற நிமிஷாம்பா கோவில் அமைந்துள்ளது.மாசி மகம் பவுணர்மியை ஒட்டி, மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள், நிமிஷாம்பாவை தரிசிக்க, பிப்., 26 இரவே வருகை தந்தனர்.பிப்., 27ல், அதிகாலை, 1:00 - 3:00 மணி வரை பூஜை நடந்தது. பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. காலையில், காவிரி ஆற்றில் குளிக்க, சிறியவர் முதல் பெரியவர்கள் வரை, வரிசையில் நின்றிருந்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை, தாலுகா நிர்வாகம் செய்திருந்தது. கோவில் அர்ச்சகர் பிரம்மரம்பா மகேஸ்வரி கூறுகையில், மாசி மகத்தின் போது, சுவாமியை தரிசிப்பது மிகவும் புனிதமானது. அன்றைய தினம், கோவில் அருகில் செல்லும் நதியில் குளித்தால் புண்ணியம் கிடைக்கும், என்றார்.
1649 days ago
1649 days ago
1649 days ago