உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நித்யகல்யாண பெருமாளுக்கு விடையாற்றி உற்சவம்

நித்யகல்யாண பெருமாளுக்கு விடையாற்றி உற்சவம்

 காரைக்கால்; காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவில் பிரமோற்சவ விழாவில் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா நடந்தது.காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள கைலாசநாதர், நித்யகல்யாணப் பெருமாள் கோவில் தேவஸ்தானம் சார்பில் பிரமோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியோற்றத்துடன் துவங்கியது. தினமும் நித்யகல்யாண பெருமாள் பல்வேறு அலங்காரத்தில் வீதியுலா வந்தார்.கடந்த 22ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 23ம் தேதி திருத்தேர் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் விடையாற்றி உற்சவத்தை முன்னிட்டு பெருமாள் புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !