திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :1695 days ago
திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த லக்கூர் கிராமத்திலிருந்து திருப்பதிக்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக ஆன்மிக பயணம் மேற்கொண்டனர்.திட்டக்குடி அடுத்த லக்கூர் கிராமத்திலிருந்து திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசனம் செய்ய பக்தர்கள் ஆண்டுதோறும் பாதயாத்திரையாக செல்வது வழக்கம். கடந்த 11 ஆண்டுகளாக ஆன்மிக பயணம் மேற்கொண்டு வரும் பக்தர்கள், நேற்று காலை 12ம் ஆண்டு பயணத்தை லக்கூரிலிருந்து துவக்கினர்.முன்னாள் ஊராட்சித் தலைவர் மோகனசுந்தரி கோவிந்தசாமி தலைமையில் 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் பயணத்தைத் துவக்கினர்.