உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சோபுரநாதர் சுவாமி சிலை மீது சூரிய ஒளி

திருச்சோபுரநாதர் சுவாமி சிலை மீது சூரிய ஒளி

 புதுச்சத்திரம் - திருச்சோபுரம் சத்யாயதாஷி சமேத திருச்சோபுரநாதர் கோவிலில் சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு நடந்தது. திருச்சோபுரம் சத்யாயதாஷி சமேத திருச்சோபுரநாதர் கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் சுவாமி சிலை மீது சூரிய ஒளிபடும் நிகழ்வு நடப்பது வழக்கம்.இந்த சூரிய அஸ்தமன பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தால் பல்வேறு தோஷங்கள் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.இந்தாண்டு சூரிய அஸ்தமன பூஜை நேற்று நடந்தது. அதையொட்டி அன்று மாலை 5:00 மணிக்கு திருச்சோபுரநாதருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு சூரியஒளி சுவாமி சிலை மீதுபடும் நிகழ்வு நடந்தது.ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !