அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
முசிறி: முசிறி யூனியன் பொன்னங்கன்னி பட்டியில் உள்ள ஸ்ரீ பூவாயி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. விழா முன்னிட்டு, காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வருதல், மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து பூஜை, வாஸ்து பலி, பூர்ணா ஹுதி, சுவாமிக்கு கோடி கலசம் வைத்தல், சகஸ்ரநாமம், தேவபாராயணம், கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. அதை தொடர்ந்து பூவாயி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான பெரியக்காள், பனையடி கருப்பு, கன்னிமார், பட்டானி துலுக்கன், பழனியாண்டவர், கொப்பாட்டியம்மன், வன்னிய சேவுகன் ஆகிய தெய்வங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். விழாவையொட்டி அன்னதானமும், மா விளக்கு பூஜையும் நடந்தது. கும்பாபிஷேக விழாவில் பொன்னாங்கன்னிபட்டி, நெய்வேலி, முசிறி, தண்டலைபுத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். யாக சாலை பூஜைகளை தண்டலைபுத்தூர் நாகராஜன் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.