உலக நன்மை வேண்டி 508 பெண்கள் பால்குட ஊர்வலம்
ADDED :1686 days ago
ஆரணி: ஆரணி அருகே, உலக நன்மை வேண்டி, பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலம் சென்றனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த புங்கம்பாடியில், பழமையான காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று, கொரோனாவில் இருந்து மீள வேண்டியும், உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், 508 பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக சென்று, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.