உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகிராம் சுரத்குமார் சுவாமிகளின் 20ம் ஆண்டு ஆராதனை உற்சவம்

யோகிராம் சுரத்குமார் சுவாமிகளின் 20ம் ஆண்டு ஆராதனை உற்சவம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், யோகிராம் சுரத்குமார் ஆஸ்ரமத்தில், யோகிராம் சுரத்குமாரின், 20ம் ஆண்டு ஆராதனை உற்சவம் நடந்தது. இதை, ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், அக்ரஹார கொல்லையில் அமைந்துள்ள பகவான் யோகிராம் சுரத்குமாரின், 20ம் ஆண்டு ஆராதனை விழா நேற்று காலை நடந்தது. இதையொட்டி, 20க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் பங்கேற்ற,  கணபதி பூஜை, மகன்யாசம், ஏகாதசருத்ரம், ருத்ர ஹோமம் நடத்தப்பட்டது. பின்னர், யோகிராம் சுரத்குமார் லிங்க பகவானுக்கு  மகா அபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து வேதபாராயணம் நடந்தது. ஆஸ்ரமத்தில், வண்ணமலர்களால் யாகிராம் சுரத்குமாரின் உருவச்சிலை அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில், சாதுக்களுக்கு வஸ்த்ர தானம், அன்னதானம், வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !