உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

மயானக்கொள்ளை திருவிழாவையொட்டி அம்மன் கோவிலில் சிறப்பு யாகம்

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, நேற்று கொடியேற்றம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

தர்மபுரி, குமாரசாமிப்பேட்டை அங்காளம்மன் கோவில் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 11:00 மணிக்கு, மஹா கணபதி, சுப்பிரமணியர், இக்கோவில் அம்பாளுக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. தொடர்ந்து நேற்று காலை, 6:00 மணிக்கு, சக்தி கரகம் அழைத்தல், இரவு, 7:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு, சக்தி கரக ஊர்வலம், குண்ட பூஜை நடக்கவுள்ளது. நாளை காலை, 9:00 மணிக்கு, பால்குட ஊர்வலம், அம்மனுக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. இரவு, 11:00 மணிக்கு, சிவன் பார்வதி அவதாரத்தில் திருவீதி உலா நடக்கவுள்ளது. இரவு, 7:00 மணிக்கு, பொங்கல் வைத்தல், சுவாமி ஊர்வலம் நடக்கவுள்ளது. நாளை மறுநாள் காலை, 8:00 மணிக்கு, பக்தர்களுக்கு அலகு போடுதல் நிழ்ச்சி நடக்கவுள்ளது. மேலும், வரும் சனிக்கிழமை காலை, 11:00 மணிக்கு, மயானக்கொள்ளை விழா நடக்கவுள்ளது. இதையொட்டி நேற்று காலை, 9:00 மணிக்கு சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !