உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புல்லாணி கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம்: மார்ச் 19ல் துவக்கம்

திருப்புல்லாணி கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம்: மார்ச் 19ல் துவக்கம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகன்னாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்சஸம் மார்ச் 19., அன்று அனுக்ஞை பூஜையுடன் இரவு 7 மணிக்கு துவங்குகிறது. மறு நாள் மார்ச் 20., சனிக்கிழமை காலை 8 மணிக்கு மேல் பிரகாரத்தில் உள்ள கொடிமரத்தில் விழாவிற்கான கொடியேற்றம் நடக்க உள்ளது. வருகிற மார்ச் 28., ஞாயிறு அன்று காலை 9 மணிக்கு மேல் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் 52 உயரமுள்ள பெரிய தேரில் வடம் பிடித்து தேரை இழுக்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. வருகிற மார்ச் 31 அன்று விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, பேஸ்கர் கண்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !