உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜெனகை மாரியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு

ஜெனகை மாரியம்மன் கோயில் மண்டல பூஜை நிறைவு

 சோழவந்தான் : சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜன.,25ல் நடந்தது. இதையடுத்து துவங்கிய 48 நாள் மண்டல பூஜை நேற்று முன்தினம் நிறைவுற்றது. இதையொட்டி சிவாச்சார்யர்கள் சிறப்பு ஹோமம் நடத்தினர். 108 சங்காபிஷேகத்தையடுத்து அம்மனுக்கு 18 வகை அபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் இளமதி, திருப்பணிக்குழுவினர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !