திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை பூஜை
ADDED :1782 days ago
நத்தம் : நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி மாத காத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, புஷ்பம், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட அபிேஷகங்கள் நடந்தது. ராஜ அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு, சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. சுற்றுப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் .