சமய வழிபாட்டில் இத்தனை விரதங்கள் இருப்பது தேவைதானா?
ADDED :4938 days ago
எந்த விஷயமாக இருந்தாலும் இருவித நிலைகள் உண்டு. ஒன்று சாமான்யநிலை. மற்றொன்று உயர்நிலை. பக்தியை மனதில் நிலைநிறுத்தவும், கடவுளின் அருளைப் பெறவும், இறைவனுடன் இரண்டறக் கலந்து முக்திநிலை பெறவும் தான் விரதங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. இந்த விஷயங்களில் எதுவுமே உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் சாமான்யநிலையில் தேக ஆரோக்கியம் என்ற ரீதியிலாவது விரதத்தை மேற்கொள்வது நல்லது.