திருச்சுழி திருமேனிநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்
ADDED :1690 days ago
திருச்சுழி: திருச்சுழி துணைமாலை நாயகி திருமேனிநாதர் சுவாமி கோயில் பங்குனி விழாவை யொட்டி நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இக்கோயில் பங்குனி விழா மார்ச் 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் இவ்விழாவில் நேற்றுமுன்தினம் இரவு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. சுவாமியுடன் அம்மன் புஷ்ப வாகனத்தில் ஊர்வலம் வந்தார். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். இதைதொடர்ந்து நேற்று தேரோட்டம் நடந்தது. முக்கிய வீதிகளில் பவனி வந்த தேரை ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் இழுத்தனர்.