உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆறுமுக சுவாமி கோவிலில் சூர்ய பூஜை

ஆறுமுக சுவாமி கோவிலில் சூர்ய பூஜை

 திருத்தணி : கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், நேற்று நடந்த, முதல் நாள் சூர்ய பூஜையில், திரளான பக்தர்கள் வழிபட்டனர். திருத்தணி முருகன் கோவிலின் துணை கோவிலான, கோட்ட ஆறுமுக சுவாமி கோவிலில், நேற்று முதல் நாள், சூர்ய பூஜை நடந்தது.இதையொட்டி, காலை, 6:05 மணிக்கு, சூரியனின் ஒளிக்கதிர்கள், மூலவர் முருகப்பெருமானின் திருப்பாதம் மீது விழுந்தது. அப்போது, மூலவர் முருகப் பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.இன்று காலை, சூரிய ஒளிக்கதிர்கள் மூலவரின் திருமேனி மீதும், நாளை, மூலவரின் தலை மீதும் சூரிய ஒளிக்கதிர்கள் விழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !