பொன்மலை ஆண்டவர் கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :1674 days ago
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டியை அடுத்த கொண்டையம்பாளையத்தில், பழமை வாய்ந்த பொன்மலை ஆண்டவர் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி உத்திரவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தையொட்டி, நேற்று காலை மகா சங்கல்பம், கணபதி ஹோமம் நடந்தது. மூலவருக்கு, 108 பால்குட அபிஷேகத்துடன் சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதையடுத்து திருக்கல்யாணம், தீபாராதனை நடந்தது. பொன்மலை ஆண்டவர், வள்ளி - தெய்வானையுடன், உட்பிரகாரத்தில் எழுந்தருளி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பின் உற்சவர், மயில் வாகனத்தில் எழுந்தருளி கோவில் உலா நடந்தது.