உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

விநாயகர் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை

வால்பாறை : வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில், சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.

வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி மாத முதல், சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. நேற்று மாலை, 6:30 மணிக்கு விநாயகருக்கு பால், தயிர், பன்னீர், விபூதி, இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்களை கொண்டு, சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.அதனை தொடர்ந்து, மாலை, 6:45 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதே போல், வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !