உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரை சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்திரை பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை : மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் சித்திரை பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. கொரோனா தொற்று நோய் காரணமாக சித்திரைப் பெருவிழா கோயில் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்படவுள்ளதால் கோயிலில் குறித்த நேரங்களில் மட்டும் சுவாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். திருவிழாவையொட்டி சுவாமி புறப்பாடு காலங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை. விழாவை முன்னிட்டு, இன்று (ஏப்ரல் 15ம் தேதி) கோயில் வளாகத்தில் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. கொடியேற்றத்தில் பிரியாவிடையுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !