உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணியூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு தரிசனம்

கணியூர் ஐயப்பன் கோவிலில் சிறப்பு தரிசனம்

 உடுமலை: உடுமலை அருகேயுள்ள கணியூர் ஐயப்பன் கோவிலில், தமிழ்ப்புத்தாண்டு தினமான இன்று, சித்திரை விஷூ கனி தரிசன பூஜை நடக்கிறது. இன்று, காலை, 5:15க்கு, நடை திறப்பு, மங்கள இசை, 5:30க்கு, விஷூ கனி தரிசனம் நடக்கிறது. காலை, 7:00க்கு, கணபதி ேஹாமமும், தொடர்ந்து சுவாமிக்கு, 24 வகையான மூலிகைகளை கொண்டு சிறப்பு அபிேஷகம் நடக்கிறது.காலை, 9:30க்கு, மழை வேண்டி, ஏழு புண்ணிய தீர்த்த அபிேஷகம், 108 சங்கு அபிேஷகம் நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி ஐயப்பன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி மற்றும் அன்னதானம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !