உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமுருகநாத சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருமுருகநாத சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

அனுப்பர்பாளையம்: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, திருமுருகன் பூண்டியில் அமைந்துள்ள திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தொல்லியல் துறை தடை விதித்துள்ளது.

திருப்பூர், அடுத்த திருமுருகன் பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாதசுவாமி கோவில் உள்ளது. பழமைவாய்ந்த இக்கோவில் தொல்லியல்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, கோவிலில் தரிசிக்க பக்தர்களுக்கு இன்று முதல் தொல்லியல் துறை தடை விதித்துள்ளது. இதற்கான அறிவிப்பு கோயிலின் நுழைவாயிலில் ஒட்டப்பட்டு உள்ளது. கோவிலில் பூஜைகள் வழக்கம்போல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !