திருக்கோஷ்டியூர் பிரமோற்ஸவம்: சிறப்பு அலங்காரத்தில் சுவாமி
ADDED :1734 days ago
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் கொடியேற்றத்துடன் பிரமோற்ஸவம் துவங்கி நடைபெற்று வருகிறது.கொரோனா கட்டுப்பாடு காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் 12 நாட்கள் பிரமோற்ஸவம் கொண்டாடப்படும். தினசரி இரவு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறும். பிரம்மோற்சவ 3ம் நாளில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர்.