திருநள்ளாறு கோவிலில் 24, 25 தேதிகளில் தரிசனம் ரத்து
ADDED :1726 days ago
காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் பொது ஊரடங்கு காரணமாக 24, 25 ஆகிய தேதிகளில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கொரோனா அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநிலத்தில் சனி, ஞாயிறுக் கிழமைகளில் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதையடுத்து வரும் 24, 25 தேதிகளில் திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.கோவில் நிர்வாக அதிகாரி (பொ) காசிநாதன் கூறுகையில், பொது ஊரடங்கு காரணமாக நாளை 24, 25ம் தேதிகளில் சனீஸ்வர பகவான் கோவிலில் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. இதனால் வெளியூர் பக்தர்கள் யாரும் வரவேண்டாம். மேலும் கோவிலில் காலை முதல் இரவு வரை வழக்கமான பூஜைகள் நடக்கும்.