மாசாணியம்மன் கோவிலில் மிளகாய் யாகம்
ADDED :1663 days ago
ப.வேலூர்: கொரோனா வைரஸ் தொற்று குறைய, ப.வேலூர் அடுத்த, கோப்பணம்பாளையத்தில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் உள்ள மாசாணியம்மன் கோவிலில், மிளகாய் யாகம் நடந்தது. தொடர்ந்து மாசாணியம்மன், பரமேஸ்வரர், அரசாயி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி, மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட, 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர்.