உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் திருகல்யாண வைபவம்

சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் திருகல்யாண வைபவம்

மதுரை : மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள் பாலிக்கும்,  கோமதி அம்பிகை சமேத சங்கர லிங்கம் சுவாமி,  சங்கரநாராயணர் கோவிலில், திருகல்யாண வைபவம் நடைபெற்றது.

அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்பிகை சமேத அருள்மிகு ஸ்ரீ சங்கரலிங்கம் சுவாமி, அருள்மிகு ஸ்ரீ சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில், சிவாலயபுரம், தும்பைப்பட்டி, மேலூர் -ல் எழுந்தருளி அருள் பாலித்து வரும்  கோயிலில் 24.04.2021, இன்று சனிக்கிழமை காலை 6.00 மணி அளவில் யாக சாலை பூஜையுடன் திருகல்யாண வைபவம் துவங்கி, காலை 8.35 மணி  முதல் 8.50 மணிக்கு அருள்மிகு கோமதி அம்பிகைக்கும், சங்கரலிங்கம் ஸ்வாமிக்கும் நடைபெற்றது. தொடர்ந்து கல்யாண விருந்தும் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு
பிரதோஷ பூஜை நடைபெற உள்ளது. அடியார் பெருமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடை வெளியில், குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமிகள் அருளாசி பெற்று சென்றனர். சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !