கருட வாகனத்தில் பாலமலை ரங்கநாதர் உலா
ADDED :1724 days ago
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலை ரங்கநாதர் கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழாவையொட்டி, கருட வாகனத்தில் பெருமாள் எழுந்தருளினார்.
கொரோனா தொற்று காரணமாக, பாலமலை சித்ராபவுர்ணமி தேர் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், பக்தர்கள் இல்லாமல் சித்ரா பௌர்ணமி பூஜைகள் மட்டும் நடந்து வருகின்றன. கடந்த, 19ம் தேதி திருவிழா துவங்கியது. தொடர்ந்து கொடியேற்றம், அன்ன வாகனம், அனுமந்த வாகனம், கருட வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளி, அருள்பாலித்தார். தொடர்ந்து, திருக்கல்யாண உற்சவம், பரிவேட்டை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழாவில், பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.