அலங்காநல்லூரில் சித்திரை களரி திருவிழா
ADDED :1825 days ago
அலங்காநல்லூர்: அலங்காநல்லூர் அருகே வலசை கம்மாளப்பட்டி அழகு நாச்சியம்மன் பாரி கருப்புசாமி கோவில் சித்திரை களரி திருவிழா நடந்தது.பாரம்பரிய முறைப்படி அழகர் மலையிலிருந்து நுரபுர கங்கை தீர்த்தம் கொண்டுவரப்பட்டது. அம்மன், சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தன. மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்கள், வர்ண குடைகள், வாணவேடிக்கையுடன் சாமியாடிகள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக 21 சாமியாடிகள் தங்கள் பரிவார தெய்வங்களின் வேடமணிந்து பாரம்பரிய வழக்கப்படி திரி எடுத்து சாமியாட்டம் ஆடினர்.