சங்கடஹர சதுர்த்தி: விநாயகர் கோயில்களில் சிறப்பு வழிபாடு
ADDED :1721 days ago
சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, உலக நன்மைக்காக விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. உடுமலை சித்திபுத்தி விநாயகர் கோவிலில் குபேர விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்கவில்லை.