வல்லபை ஐயப்பன் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா
ADDED :1956 days ago
ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் உள்ள வல்லபை விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு மாலையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவர் வல்லபை விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. பக்தர்கள் வழிபாட்டில் பங்கேற்கவில்லை. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.