சித்திரை திருவோணத்தை ஒட்டி அம்பலவானருக்கு திருமஞ்சனம்
ADDED :1661 days ago
கோவை : சித்திரை மாத திருவோணத்தை ஒட்டி பேரூராதீனத்திலுள்ள அம்பலவான பெருமானுக்கு, சகலதிரவிய அபிஷேகம் நடந்தது.
வைணவத்திருத்தலங்களில் திருவோணம் விமரிசையாக கொண்டாடப்படுகிறதோ, அதே போல் சிவாலயங்களிலும் கொண்டாடப்படுகிறது. சித்திரை திருவோணத்தை ஒட்டி நேற்று பேரூராதீனத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அம்பலவானப்பெருமானுக்கு நேற்று பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், பன்னீர், தேன், விபூதி, சந்தனம் உள்ளிட்ட சகல திரவியங்களில், சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது.சிறப்பு அலங்காரத்தில் அம்பலவான பெருமாள் அருள் பாலித்தார். பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் நடைபெற்ற அபிஷேக நிகழ்ச்சியில், ஆதீனத்திலுள்ள அடியார்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.