நவ நரசிம்மமூர்த்திகள்
ADDED :1716 days ago
ஜ்வாலாஹோபில மாலோல க்ரோடா காரஸ் ச பார்கவ
யோகா நந்தஸ் சத்ரவடு: பாவனோ நவமூர்த்தய:
பகவான் நரசிம்மராக ஆவிர்பவித்து ஒன்பதுவித வடிவங்களில் நவ நரசிம்மர்களாக அஹோபில க்ஷேத்திரத்தில் காட்சி தருகிறார். அந்த நவரூபங்களைத் தியானிப்போம். ஜ்வாலா நரசிம்மர்: எங்கிருக்கிறான் உன் நாராயணன் என்ற ஹிரண்யகசிபுவின் அறைகூவலுக்குப் பதிலாக, பிரகலாதன், தூணிலும் இருப்பார்! துரும்பிலும் இருப்பார்! என்றவுடன், கோபத்தின் உச்சியில் அவன் தன் கதையினால் தனது ஆயிரம் தூண்கள் கொண்ட அரண்மனையில் ஒரு தூணைத் தாக்க, அதே நொடியில் சிம்ம முகமும், மனித உடலும், வஜ்ரநகங்களும் கொண்டு தோன்றிய கோலம்.