மேல்மலையனுாரில் ஊஞ்சல் உற்சவம் ரத்து
ADDED :1620 days ago
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம், ரத்து செய்யப்பட்டுள்ளது.ஹிந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் ராமு செய்திக்குறிப்பு:
கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு, அரசு வழிகாட்டு நடைமுறைப்படி, விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், அமாவாசை ஊஞ்சல் உற்சவம், விழாக்கள், சுவாமி தரிசனம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆதலால், வரும், 11ம் தேதி அமாவாசை அன்று, பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வர வேண்டாம். மறு அறிவிப்பு வரும் வரை, வழக்கமான தரிசனத்திற்கும் அனுமதி இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.