உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில், நாட்டுபுற கலைஞர் குடும்பங்களுக்கு நிவாரணம்

தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில், நாட்டுபுற கலைஞர் குடும்பங்களுக்கு நிவாரணம்

தஞ்சாவூர்: டெல்டா மாவட்டங்களில், கொரோனா ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட, நலிவுற்ற 1,820 நாட்டுபுற கலைஞர்களின் குடும்பங்களுக்கு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடம் சார்பில் நேற்று நிவாரணம் வழங்கப்பட்டது.கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஒராண்டாக காலமாக எவ்வித கலைநிகழ்ச்சியும் இல்லாததால், நாட்டுபுற கலைஞர்கள் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனர். அவர்களின் துயரத்தை சிறிதளவாவது குறைப்பதற்காக தஞ்சாவூர்,அரியலுார்,திருவாரூர்,மயிலாடுதுறை மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள 1,820 நலிவுற்ற கிராமிய கலைஞர்களின் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் செலவில் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரணத்தை, முதற்கட்டமாக தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் கலெக்டர் கோவிந்தராவ்,ஞ்சை ராமகிருஷ்ண மடம் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் உள்ளிட்டோர் துவக்கி வைத்தது வழங்கினர். இது குறித்து விமூர்த்தானந்த மகராஜ் கூறுகையில்; கொரோனா தொற்று காரணமாக அந்தந்த மாவட்டங்களில், மடத்தின் சார்பில் கலைஞர்களுக்கு வழங்கப்படுகிறது. அதன் முதற்கட்டமாக தஞ்சாவூரில் உள்ள கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !