ஆனந்த நடராஜ சுவாமிகள் ஜீவசமாதி கோயில் கும்பாபிஷேகம்
ADDED :1954 days ago
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள ஆனந்த நடராஜ சுவாமிகள் ஜீவசமாதி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.இதையொட்டி மே 4 ல் கணபதி ஹோமம், முதல் கால யாக பூஜைகள் நடந்தன. நேற்று காலை இரண்டாம் கால பூஜை நடந்தன. ரமேஷ் பட்டர் கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். அகஸ்தியர் கோயில் உலக நல சித்தானந்த ஞான சபா அறக்கட்டளை மற்றும் விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர்.