மாசானியம்மன் கோவில் சார்பில் ஆயிரக்கணக்கானோருக்கு கபசுர குடிநீர்
ADDED :1705 days ago
குன்னூர்: குன்னூர் மாசானி அம்மன் கோவில் சார்பில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் மாடல்ஹவுஸ் பகுதியில் உள்ள மாசானியம்மன் கோவில் சார்பில், கோவில் அறக்கட்டளை மூலம் கொரோனா ஊரடங்கு நேரத்தில் மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று குன்னூர் வி. பி., தெரு பகுதியில் அதே இடத்தில் காய்ச்சி, கபசுர குடிநீர் ஆயிரக்கானோருக்கு வழங்கப்பட்டது. காய்கறி வாங்க வந்த பொதுமக்கள், போலீசார், தூய்மை பணியாளர்கள் என பலருக்கும் வழங்கப்பட்டது. கோவில் நிறுவனர் சுதர்சன், ஆனந்தகுமார், முரளீதரன், ரவிக்குமார், ஆனந்த். தியாகராஜன் உட் பட நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர். தொடர்ந்து வீடுகள் தோறும் கபசுர பொடி வழங்கவும் திட்டமிட்டுள்ளனர்.