அறநிலையத்துறை உணவு வழங்கல்
ADDED :1656 days ago
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை சார்பில் கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள், அவர்களது உறவினர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி அறநிலையத்துறை சார்பில் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம் ஆகிய மூன்று அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி தொடங்கியது.தினசரி மதியம் மற்றும் இரவு நேரங்களில் 1,000 பேருக்கு தக்காளி, எலுமிச்சை, தயிர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு உணவு வழங்கப்பட்டு வருகிறது.நிகழ்ச்சியில் அறிநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், பணியாளர்கள் உடனிருந்தனர்.