கொரோனா தொற்று எதிர்ப்புக்காக பொதுமக்களுக்கு சத்யசாய் சேவை
ADDED :1601 days ago
திண்டுக்கல் : சிறுமலை பகுதியில் கொரோனா தொற்று எதிர்ப்புக்காக பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஆர்சனிக் ஆல்பம் 30, முகக்கவசம் ஆகியவை வழங்கப்பட்டது. சிறுமலை வெள்ளிமலை சத்யசாய் டிரஸ்ட் மற்றும் ஸ்ரீசத்யசாய் மீனாட்சி நிகேதனம் சார்பில் நிறுவனர் அழகர்சாமி, செயலாளர் எம்.ஜி.எஸ்.வி.சபரிகிரி ஆகியோர் அவற்றை ஊராட்சித் தலைவரிடம் வழங்கினர். சிறுமலை, அகஸ்தியர்புரம், புதுார், பழையூர், அண்ணாநகர், கடமான்குளம் பகுதிகளில் வெள்ளி என்பவர் தலைமையில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்பட்டது.