லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு
ADDED :1596 days ago
பழநி: பழநி இராமநாத நகரில் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. நேற்று லட்சுமி நரசிம்மர் ஜெயந்தி வழிபாடு நடைபெற்றது. உலக நலன் வேண்டி சிறப்பு யாகம் செய்யப்பட்டது. யாகத்தில் வைக்கப்பட்ட கலச நீரில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பான அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்தது.