அன்னதான திட்ட உணவு அறநிலைய துறை உத்தரவு
ADDED :1593 days ago
சென்னை : கோவில் அன்னதான திட்ட உணவுப் பொட்டலங்களை, கலெக்டரின் உதவி பெற்று, மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என, அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது.
அறநிலையத்துறை இணை கமிஷனர்களுக்கு, கமிஷனர் குமரகுருபரன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், அன்னதானம் வழங்கும் திட்டத்தின் வாயிலாக, தினமும் உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது. தளர்வற்ற ஊரடங்கு காரணமாக, கோவிலில் இருந்து மருத்துவமனைகளுக்கு வினியோகம் செய்ய, இணை கமிஷனர்கள், மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டு, தேவையான உதவிகளை பெற்று செயல்பட வேண்டும்.அன்னதானம் தயார் செய்யும் கோவில் பணியாளர்கள், உணவுப் பொட்டலங்கள் வினியோகம் செய்பவர்கள், உரிய பாதுகாப்பு கவசம் உபயோகிப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.