உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களின்றி சிக்கல் சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகம்

பக்தர்களின்றி சிக்கல் சிங்காரவேலருக்கு சிறப்பு அபிஷேகம்

 நாகப்பட்டினம்: நாகை அடுத்த சிக்கல் சிங்காரவேலர் கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.

நாகை அடுத்த சிக்கலில் பிரசித்திப்பெற்ற சிங்காரவேலர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வைகாசி விசாக நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெறும். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கோவில்கள் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனம் தடை செய்யப்பட்டு உள்ளது. இந்நிலையில் முருகப்பெருமான் அவதரித்த வைகாசி விசாகத்தை முன்னிட்டு, கோவிலில் பக்தர்களின்றி, தேவியருடன் எழுந்தருளிய முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !