இருக்கன்குடி மாரியம்மன் அடியார் பக்த சேவை ஆண்டு விழா!
ADDED :4859 days ago
திருநெல்வேலி:அகில உலக இருக்கன்குடி மாரியம்மன் அடியார் பக்த சேவையின் 4ம் ஆண்டு துவக்க விழா நடந்தது.விழாவை முன்னிட்டு கிருஷ்ணாபுரம், பேட்டை ஆதரவற்ற பள்ளி குழந்தைகள், மேலசிங்கம்பட்டி வின்சென்ட் கருணை இல்லம் போன்ற இடங்களில் அடியார் பக்த சேவையினர் அன்னதானம் வழங்கினர். அன்னதானத்தை இருக்கன்குடி மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி துவக்கி வைத்தார். இதுதவிர பள்ளி குழுந்தைகளுக்கு சீருடை மற்றும் நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியில் சமூக சேவகர் பாலசுப்பிரமணியன், பாலசந்தர், குயில் அமைப்பின் தலைவர் முருகன், சட்டக்கல்லூரி மாணவர் அருணாசலம், சந்துரு, பேராச்சி உட்பட பலர் கலந்து கொண்டனர். பக்த சேவையின் தலைவர் ராஜிவ்காந்தி நன்றி கூறினார்.