உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் கோயில்களில் இன்று சனி பிரதோஷம் வழிபாடு!

கடையம் கோயில்களில் இன்று சனி பிரதோஷம் வழிபாடு!

ஆழ்வார்குறிச்சி: கடையம் வட்டார பகுதி சிவன் கோயில்களில் இன்று (16ம் தேதி) சனி பிரதோஷம் நடக்கிறது.பிரதோஷ வழிபாடு மிகவும் முக்கியமானதாகும். அதிலும் சனி பிரதோஷத்தன்று வழிபாடு செய்வது மிகுந்த பலனை தரும். ஆகையால் சனி பிரதோஷம் மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. இன்று (16ம் தேதி) சனி பிரதோஷம் நடக்கிறது. பிரதோஷத்தை முன்னிட்டு கடையம் வட்டார கோயில்களில் விசேஷ பூஜைகள், அலங்கார தீபாராதனைகள், ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளல் ஆகியன நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !